தித்திக்கும் சுவையில் சத்தான ராகி அல்வா.., எப்படி தயாரிப்பது?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த ராகியில் சுவையான அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- ¾கப்
- கோதுமை மாவு- ¼கப்
- நெய்- அரை கப்
- முந்திரி- 10
- வெல்லம்- 1கப்
- தண்ணீர்- 2கப்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய் தூள்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து ராகி மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.
அடுத்து கடாயில், சிறிதளவு நெய்யை சூடாக்கி துருவிய முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனையடுத்து வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் உப்பு சேர்த்து குறைந்த தீயில் வைத்து கொதிவைக்கவும்.
இதற்கடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் சேர்த்து கிளறவும்.
இறுதியாக அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி ஒட்டாமல் வந்ததும் இறக்கினால் சூடான சுவையான ராகி அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |