தினமும் ராகியை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்தவகையில், தினமும் ராகியை உணவில் சேர்த்துக்கொள்வதால் மேலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
1. உடல் எடையை குறைக்க உதவும்- ராகியில் அதிகமாக உள்ள நார்ச்சத்து செரிமானம் மெதுவாக நடைபெற்று, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால் அடிக்கடி பசி ஏற்படாமல் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2. எலும்புகள் வலுப்படும்- ராகியில் அதிகமாக உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகள் வலுப்படுவதுடன் உடல் சோர்வும் குறையும். எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் ராகியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. இரத்த சர்க்கரை கட்டுப்படும்- ராகியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. அதனால் இது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காது. சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி நல்ல உணவாக கருதப்படுகிறது.
4. செரிமானத்திற்கு உதவும்- ராகி ரொட்டி லேசான உணவாக இருப்பதால் எளிதில் செரிமானமாகும்.
5. உடல் சூட்டை குறைக்கும்- ராகி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் கோடைக்காலத்தில் நீரிழப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க ராகியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.