இரும்புச்சத்து நிறைந்த சத்தான ராகி இடியாப்பம்.., எப்படி செய்வது?
Ragi Idiyappam Recipe- ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த ராகியில் சுவையான இடியப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 2 கப்
- நெய் - 1 ஸ்பூன்
- உப்பு - ¼ ஸ்பூன்
- சூடான நீர் - 2 கப்
- தேங்காய்- 1
செய்முறை
முதலில் ராகி மாவை எடுத்து அதில் நெய் மற்றும் உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வருவது போல பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதில் சூடான தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு போல கரைத்துக் கொள்ளலாம்.
இப்போது இந்த மாவை பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து சற்று கெட்டியான கலவையாக மாறும் வரை கலக்க வேண்டும்.

அதன் பிறகு, இந்தக் கலவையை ஆறவைத்து கைகளில் எண்ணெய் தடவி 5 நிமிடம் நன்கு பிசையவும்.
பின்னர் இதை சிறிய உருண்டைகளாக உருட்டி இடியாப்பம் பிழியும் உருளையில் போட்டு வாழை இலையில் பிழிந்து கொள்ளலாம்.
இறுதியாக இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தேங்காய் துருவல் தூவினால் சுவையான ராகி இடியாப்பம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |