கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கும் ராகி கஞ்சி செய்வது எப்படி?
இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றல் சிறு தானியமான ராகிக்கு இருப்பது யாரும் அறிந்த விடயமே.
ஆனால் ராகியை பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. எனவே வீட்டில் இருக்கும் பலரும் எப்போதும் விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் ராகி வைத்து எப்படி சுவையான கஞ்சி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 1/4 கப்
- தண்ணீர் - 3 கப் (1 கப் - 250 மிலி)
- கெட்டியான தயிர்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய் - 2
- கொத்துமல்லி தழை
- உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
1. ராகி மாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. மறுநாள் காலையில், தண்ணீரின் மேல் உள்ள நுரையை அகற்றி, ராகி மாவுடன் தண்ணீரின் அடிப்பகுதியை நன்றாக கலக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
4. ராகி கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். இடைவெளியில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
5. முடிந்ததும், தீயை அணைத்து, ராகி கலவையை முழுவதுமாக ஆற விடவும்.
6. ஆறிய ராகி கலவையில் கெட்டியான தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
7. கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்தால் போதும், சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கஞ்சி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |