உடல் வலுவிற்கு சத்தான ராகி கூழ்: எப்படி தயாரிப்பது?
தமிழ் நாட்காட்டியின் ஆடி மாதம் அனைத்து அம்மன் கோவில்களிலும் வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்படும்.
அதில் குறிப்பாக, அம்மன் பிரசாதமாக பக்தர்களுக்கு ராகி கூழ் வழங்கும் பழக்கம் இருக்கிறது.
அந்தவகையில், ஆடி மாதத்தில் அம்மனுக்கு படைக்கப்படும் ராகி கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- பச்சை அரிசி- ¼ கப்
- தண்ணீர்- தேவையான அளவு
- மோர்- 1 கப்
- சின்ன வெங்காயம்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- பச்சை மிளகாய்- 2
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ராகி மாவில் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து பச்சை அரிசியை மிக்ஸியில் போட்டு ரவை போல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பின் அடி கனமான பாத்திரத்தில், 3 கப் தண்ணீர் சேர்த்து அரிசியைச் சேர்த்து, கஞ்சி போன்று சமைக்கவும்.
பிறகு கலந்து வைத்திருந்த ராகி மாவு மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
குறைந்த தீயில் வைத்து கெட்டியாகும் வரை ராகி பச்சை வாசனை வரும் வரை கலந்து சமைக்கவும்.
இதனைத்தொடர்ந்து அடுப்பை அணைத்து அதை முழுமையாக குளிர்விக்க விடவும்.
இப்போது ராகி கூழில் மோர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
கட்டி இல்லாமல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து குடித்தால் சத்தான ஆடி மாதம் அம்மனுக்கு படைக்கும் ராகி கூழ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |