என்றும் இளமையாக இருக்க ராகி கொழுக்கட்டை - வீட்டிலேயே செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடல் மட்டுமன்றி சருமத்தையும் இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
[A576ZAJ\
அதற்கு என்ன தான் சரும பராமரிப்பு விடயங்களை செய்தாலும் அது தீர்வலிக்கவில்லை என்றால், நீங்கள் உடனே செய்ய வேண்டியது ராசி வைத்து கொழுக்கட்டை. அதை எப்படி வீட்டில் இருந்தப்படியே இலகுவான முறையில் செய்யலாம் என இநத பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- வெல்லம் - 1 கப்
- தண்ணீர் - 1/4 கப்
- ராகி மாவு - 1 கப்
- பொடித்த அவல் - 1/2 கப்
- துருவிய தேங்காய் - 1 கப்
- பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
- கரைத்த வெல்லம்
- நெய்
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பானில் முதலில் ஒரு கப் அளவு பொடித்த வெல்லத்துடன் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி விடவும்.
2. ஒரு அகலமான கடாயில் ஒரு கப் அளவு ராகி மாவை நன்றாக வறுத்து கொள்ளவும்.
3. ராகி வாசனை வரும் வரை வறுத்து, அரை கப் பொடித்த அவல் சேர்த்து கொள்ளவும்.
4. ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. அரை கப் பொடித்த வேர்க்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. அடுப்பை அணைத்து, வெல்ல பாகை வடிகட்டி சேர்க்கவும்.
7. சிறிது நெய் மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
8. நன்றாக கலந்து கொள்ளவும்.
9. மாவை கொழுக்கட்டை பிடித்து வைக்கவும்.
10. இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, பிடித்த கொழுக்கட்டையை 15 நிமிடம் வேக வைக்கவும் .
11. சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |