உடல் வலுவிற்கு தினம் ஒரு லட்டு போதும்: எப்படி செய்வது?
ராகியில் வைட்டமின் டி, கால்சியம், இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும் உணவாக உள்ளது.
அந்தவகையில் உடல் வலுவிற்கு சுவையான ராகி லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மா- 1 கப்
- நெய்- 4 ஸ்பூன்
- எள்ளு- 1 ஸ்பூன்
- வேர்க்கடலை- ½ கப்
- உலர் திராட்சை- ¼ கப்
- வெல்லம் - ½ கப்
- ஏலக்காய்- 4
- உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு வாணலில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடானதும் அதில் ராகி மா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் எள்ளை தனியாக சேர்த்து மிதமான தீயில் வருத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் வேர்க்கடலையை தனியாக சேர்த்தது பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இதனைதொடரந்து அதில் உலர் திராட்சை, பொடி வெல்லம், ஏலக்காய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் வறுத்த ராகி மா சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நெய் மற்றும் வறுத்த எள் சேர்த்து லட்டுவாக பிடித்தால் ராகி லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |