குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி மால்ட்.., எப்படி தயாரிப்பது?
ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி மால்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி- 1 கப்
- வெல்லம்- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- முந்திரி- 5
- பாதாம்- 5
- பால்- 1 கப்
- சுக்கு பொடி- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து பின் கரைத்த ராகியை சேர்த்து வேகவைக்கவும்.

இது நன்கு நிறம் மாறி வந்ததும் அதில் வெல்லம், ஏலக்காய் தூள், சுக்கு பொடி சேர்த்து கொதிக்கவைக்கவும்.
அடுத்து இதில் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து அடுப்பை அனைத்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக இதில் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்தால் சத்தான ராகி மால்ட் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |