குழந்தைகள் விரும்பி உண்ணும் சாத்தான ராகி முறுக்கு.., எப்படி செய்வது?
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த ராகியில் சுவையான முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- அரிசி மாவு- ½ கப்
- கடலை மாவு- ¼ கப்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காய தூள்- ½ ஸ்பூன்
- வெள்ளை எள்ளு- 2 ஸ்பூன்
- வெண்ணெய்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெள்ளை எள்ளு மற்றும் உப்பு இல்லாத வெண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
இதனையடுத்து கலந்து வைத்த மாவை முறுக்கு போல் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக முறுக்கை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சத்தான ராகி முறுக்கு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |