குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி பணியாரம்.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்ணுவார்கள்.
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த ராகியில் சுவையான இனிப்பு பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 1 கப்
- அரிசி மாவு - ¼ கப்
- வெல்லம் - 1 கப்
- தேங்காய்- 1 கப்
- உப்பு- சிறிதளவு
- ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
- முந்திரி- 15
- சமையல் சோடா - ¼ ஸ்பூன்
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, வெல்லம், துருவிய தேங்காய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் உப்பு, ஏலக்காய் தூள், முந்திரி, சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் குழி பணியார சட்டி வைத்து சூடானதும் அதில் நெய் விட்டு கலந்த மாவை ஊற்றவும்.
இறுதியாக இரண்டு பக்கமும் நன்கு வெந்து பொன்னிறமாக மாறி வந்ததும் எடுத்து சாப்பிட்டால் இந்த ராகி இனிப்பு பணியாரம் சுவையாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |