நாவூறும் சுவையில் சத்தான ராகி கார பணியாரம்.., எப்படி செய்வது?
ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சத்தான ராகி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- பச்சைமிளகாய்- 2
- வெங்காயம்- 2
- உப்பு- 1 ஸ்பூன்
- தயிர்- ¼ கப்
- கொத்தமல்லி இலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
இதற்கடுத்து இதில் நறுக்கிய கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் கரைத்த மாவில் வதக்கிய கலவை, உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
இறுதியாக பணியார சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மாவை ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான ராகி கார பணியாரம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |