குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி பூரி.., எப்படி செய்வது?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும், ரத்த சோகையைத் தடுக்கவும் ராகி உதவும்.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி பூரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- ரவை- 2 ஸ்பூன்
- உப்பு- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 1 கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இவற்றில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் அப்படியே மூடி போட்டு ஊறவைக்கவும்.

இதற்கடுத்து மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி மாவை வட்டமாக தேய்க்கவும்.
பின்னர் அடுப்பில் வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கவும்.
இறுதியாக சூடான எண்ணெய்யில் தேய்த்த மாவை போட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சத்தான ராகி பூரி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |