உடல் எடையை குறைக்க உதவும் ராகி ரொட்டி.., எப்படி செய்வது?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும், ரத்த சோகையைத் தடுக்கவும் ராகி உதவும்.
அந்தவகையில், சத்தான ராகி ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- அரிசி மாவு- ½ கப்
- உப்பு- சிறிதளவு
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- நெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதன் மேல் எண்ணெய் சேர்த்து மூடி போட்டு அரை மணி நேரம் அப்படியே ஊறவைக்கவும்.

பின் இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்க்கவும்.
இதற்கடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் தேய்த்த மாவை போட்டு நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சத்தான ராகி ரொட்டி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |