உடலிற்கு வலு சேர்க்கும் ராகி சூப்.., இலகுவாக செய்வது எப்படி?
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
இதில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு அதிக அளவில் உள்ளது.
அந்தவகையில், சத்து நிறைந்த ராகியில் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- ½ கப்
- வெண்ணெய்- சிறிதளவு
- பெரிய வெங்காயம் - 2
- கேரட்- 2
- பீன்ஸ்- 3
- பச்சை மிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 4 பல்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் ராகி மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து இதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் இதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேகவைக்கவும்.
அடுத்து காய்கறிகள் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ராகி மாவை சேர்த்துக் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக சூப் கெட்டியாகி வந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவினால் சுவையான ராகி சூப் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |