டாம் லதம் எல்பிடபிள்யூ-வுக்கு டிஆர்எஸ் கேட்க மறுத்த ரகானே..! ரீபிளேவை பார்த்து கடுப்பான அஸ்வின்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாம் லதம் எல்பிடபிள்யூ-வுக்கு இந்திய அணி கேப்டன் ரகானே டிஆர்எஸ் கேட்காததால் அஸ்வின் கோபமடைந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் கடந்த நவம்பர் 25ம் திகதி கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை வினையாடி வருகிறது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 129 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3வது நாள் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 151 ரன் எடுத்திருந்த போது அஸ்வின் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
அஸ்வின வீசிய பந்தில் வில் யங் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நடுவர் நாட் அவுட் கொடுத்த நிலையில் இந்திய அணி டிஆர்எஸ் கேட்டு வில் யங் விக்கெட்டை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, அஸ்வின் வீசிய பந்தில் டாம் லதம் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், நடுவர் நாட் அவுட் கொடுத்துவிட்டார்.
இதனையடுத்து, அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் பரத்திடம் கலந்து ஆலோசித்த கேப்டன் ரகானே, டிஆர்எஸ் கேட்காமல் விட்டுவிட்டார்.
இதன் பின் ரீபிளேவில் டாம் லதம் அவுட்டானது தெரியவந்தது, இதைக்கண்டு கடுப்பில் அஸ்வின் மைதானத்தை உதைத்தார்.
Latham out LBW at 66, given not out, review not taken by India.
— Bhupesh Juneja (@BhupeshJuneja1) November 27, 2021
Are the matches going to get decided on the basis of a team’s judgment to take (or not to) DRS? pic.twitter.com/WzDoWrTQri
எனினும், டாம் லதம் 95 ரன்கள் எடுத்திருந்த போது அக்சர் பட்டேல் அவரின் விக்கெட்டை கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணி 136 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.