ரஹீம் ஸ்டெர்லிங் அதிரடி... செக் குடியரசை வீழ்த்திய இங்கிலாந்து
செக் குடியரசை வீழ்த்தி யூரோ கிண்ணம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. டி பிரிவில் இருந்து முதலிடத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி தற்போது நாக்-அவுட் சுற்றில் நுழைந்துள்ளது.
இந்திலாந்து அணிக்காக ரஹீம் ஸ்டெர்லிங் அதிரடியாக விளையாடி ஒரு கோல் அடித்திருந்தார். டி பிரிவில் ஒரு சமன் மற்றும் 2 வெற்றிகள் உட்பட 7 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணி முதலிடத்தை கைப்பற்றியது.
நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து அணி எஃப் பிரிவில் இரண்டாம் இடத்தில் வரும் அணியுடன் மோத உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய வீரர்களில் நான்கு மாறுதல்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் கோலடிக்க முயல, அது ஏமாற்றமளித்தது.
தொடர்ந்து 12ம் நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார் ரஹீம் ஸ்டெர்லிங். ஆனால், முதல் 25 நிமிடங்களில் ஒரு கோல் வாய்ப்பை கூட செக் குடியரசு அணியால் உருவாக்க முடியாமல் போனது.
25ம் நிமிடத்தில் இங்கிலாந்து அணித் தலைவரின் கோல் முயற்சியும் வெற்றிபெறவில்லை. 27ம் நிமிடத்தில் செக் குடியரிசின் கோல் முயற்சி இங்கிலாந்து கோல் கீப்பரால் முறியடிக்கப்பட்டது.
34ம் நிமிடத்தில் செக் குடியருக்கு வாய்ப்பு அமைந்தும், அந்த பந்து கோலாக மாறவில்லை. இரண்டாம் பகுதியில், செக் அணி தாக்குதல் விளையாட்டை முன்னெடுத்தது.
ஆனால் முன்வரிசை வீரர்களின் தாக்குதல் எடுபடவில்லை. ஆனால் இங்கிலாந்து அணி தடுப்பாட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தியது.
தொடர்ந்து, ஒரே ஒரு கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் நாக்-அவுட் சுற்றில் நுழைந்தது.