இலங்கைக்கு எதிரான போட்டியில் 28வது அரைசதத்தை பதிவு செய்த வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத் ஷா பல்லேகலவில் 28வது அரைசதம் விளாசினார்.
இப்ராஹிம் ரன்அவுட்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான் களமிறங்கினர்.
இப்ராஹிம் 13 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அவிஷ்கா பெர்னாண்டோ அவரை ரன்அவுட் செய்தார். அடுத்து ரஹ்மத் ஷா, குர்பாஸுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
5️⃣0️⃣ ???? ???????????! ??
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 14, 2024
The duo of @RGurbaz_21 and @RahmatShah_08 bring up an important 50-run partnership for the 2nd wicket. ?
Keep batting Atalano! ?#AfghanAtalan | #SLvAFG2024 pic.twitter.com/QyZKMqWTQZ
28வது ஒருநாள் அரைசதம்
குர்பாஸ் 57 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஷாஹிடி 5 ஓட்டங்களில் தனஞ்செய ஓவரில் அவுட் ஆனார்.
மறுமுனையில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரஹ்மத் ஷா (Rahmat Shah) தனது 28வது ஒருநாள் அரைசதத்தினை பதிவு செய்தார்.
109வது போட்டியில் விளையாடி வரும் ஷாஹிடி, 5 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் மூலம் 3724 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
Rahmat Shah steps up again and brings up yet another half-century against Sri Lanka. This is his 28th half-century in ODI cricket. ?
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 14, 2024
Top Knock Shah G @RahmatShah_08! ?#AfghanAtalan | #SLvAFG2024 pic.twitter.com/TodxCy3NoJ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |