CSKவுக்கு ஒரே ஓவரில் அதிர்ச்சி கொடுத்த வீரர்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் கெய்வாட், தூபே இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
தரம்சாலா மைதானத்தில் சென்னைக்கு சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியில் ரஹானே 9 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து மிட்செல் உடன் கைகோர்த்த அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினார்.
That turnaround by Rahul! ?#PBKSvCSK pic.twitter.com/8zfM8ggQCP
— Punjab Kings (@PunjabKingsIPL) May 5, 2024
அணியின் ஸ்கோர் 69 ஆக உயர்ந்தபோது, ராகுல் சஹார் முதல் ஓவரை வீச வந்தார். அவரது முதல் பந்திலேயே கெய்க்வாட் (32) ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் ஆனார். இரண்டு அதிரடி வீரர்களை ஒரே ஓவரில் அவுட்டாக்கி, ராகுல் சஹார் CSK அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Going Ballistic in the 6⃣th Over! ??#PBKSvCSK #WhistlePodu pic.twitter.com/gmieKIR60I
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |