இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டிராவிட் நீக்கம்? வெளியான காரணம்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்விக் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டிராவிட் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தோல்வி
சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா அணி நேருக்கு நேர் மோதி படுதோல்வியை சந்தித்தது.
இதனால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை குறித்து பல விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனால், இத்தோல்விக்கு காரணம் குறித்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களை செய்ய பிசிசிஐ ஆலோசனை நடத்த உள்ளது.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டிராவிட் நீக்கம்?
இதன் முதல்கட்டமாக இந்திய டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை நீக்கிவிட்டு, வேறொரு பயிற்சியாளரை நியமிக்க முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது இந்திய அணி அதிகமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருவதால், டிராவிட்டிற்கு பணி சுமை அதிகரித்திருப்பதால்தான் 3 முக்கிய தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், டிராவிட்டிற்கு வரும் உலகக்கோப்பை தொடரோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதன் அடிப்படையில், பிசிசிஐ டிராவிட்டை நீக்கிவிட்டு டெஸ்ட் தொடருக்கு தனிப் பயிற்சியாளரையும், ஒரு நாள் போட்டிக்கு தனிப் பயிற்சியாளரையும் இரண்டாக பிரிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது டிராவிட்டின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனையெல்லாம் அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |