மீண்டும் பேட்டை தனது ஸ்டைலில் பிடித்து விளையாடிய ஜாம்பவான் ராகுல் டிராவிட்! சிலிர்த்து போன ரசிகர்கள்... வைரல் புகைப்படம்
ராகுல் டிராவிட் தனது தனித்துவமான ஸ்டைலில் கிரிக்கெட் பேட்டை பிடித்து விளையாடும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
90’ஸ் கிட்ஸ் அனைவரும் பிடித்த வீரர் ராகுல் டிராவிட் என கூறினால் அது மிகையாகாது. நாடு வித்தியாசமின்றி உலகளவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்திய சுவர் என அழைக்கப்படும் டிராவிட் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பயிற்சியின் கீழே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது.
இந்த நிலையில் டிராவிட் மைதானத்தில் தனது டிரேட் மார்க் ஸ்டைலுடன் கிரிக்கெட் பேட்டை பிடித்திருக்கும் ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் பெரியளவில் வைரலாகியுள்ளது.
ஏனெனில் அதை பார்க்கும் ரசிகர்கள், டிராவிட்டை அப்படி பார்ப்பது அவர் முன்னர் அணிக்காக விளையாடிய போது அடித்த அருமையான ஷாட்களை நினைவூட்டுகிறது என பதிவிட்டுள்ளனர்.