இலங்கை தொடர்! இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அசத்தல் பயிற்சி கொடுக்கும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்... வைரல் வீடியோ
இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் முதற்கட்ட பயிற்சி குறித்து பயிற்சியாளர் டிராவிட் விளக்கமளித்துள்ள நிலையில் அது தொடர்புடைய வீடியோ வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது, இதற்காக இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.
இந்திய சீனியர் வீரர்கள் இங்கிலாந்து தொடருக்காக சென்றுவிட்டதால் இலங்கை தொடருக்கான அணியில் அதிகளவில் இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் செயல்படவுள்ளனர்.
ரவி சாஸ்திரி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
Out of quarantine ?
— BCCI (@BCCI) July 3, 2021
Fun activities ?#TeamIndia made the most out of their day off post quarantine before they headed to the nets in Colombo ? ? - by @28anand & @ameyatilak
Watch the full video to witness how the fun unfolded ? ? #SLvIND https://t.co/k3BiqHW1VM pic.twitter.com/d7XySHAI2O
அவர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சி அளித்து வருகிறார். இலங்கை தொடரில் பங்குபெற்றுள்ள பெரும்பாலான இளம் வீரர்கள் ராகுல் டிராவிட்டிடம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதற்கட்ட பயிற்சி குறித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. திறந்தவெளி மைதானம் ஒன்றில் வீரர்கள் வார்ம் அப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மைதானம் மற்றும் நீச்சல் குளத்தில் கைப்பந்து விளையாட்டுகளை விளையாடி குஷியாக தோன்றுகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், வீரர்கள் 17-18 நாட்கள் குவாரண்டைனில் இருந்துள்ளனர்.
தற்போது பயிற்சி தொடங்கியிருப்பது, வீரர்களுக்கு சிறப்பான விடயமாக உள்ளது. ஹொட்டலில் சிறிய காலி பூங்கா ஒன்று உள்ளது.
அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இது மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.