பிரியாவிடையின் போதும் ரோகித் சர்மாவிற்கு நன்றி தெரிவித்த ராகுல் டிராவிட் - வைரலாகும் வீடியோ
2024 ஆம் ஆண்டு பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு பெறுவதாக அறிவித்த ராகுல் டிராவிட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
உலக சாம்பியனான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் கடைசி போட்டியும் இதுதான்.
இதுவரை, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் வெற்றிகரமான பேச்சுகள் சமூக ஊடக தளங்களில் வைரலாகியது.
தற்போது ராகுல் டிராவிட்டின் உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை உரையை இந்திய கிரிக்கெட் அணி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
குறித்த வீடியோவில், வாழ்நாளில் மறக்க முடியாத நினைவில் என்னையும் ஒரு பங்காய் மாற்றியதற்கு நன்றி. உங்களை நினைத்து பெருமை கொள்கின்றேன். நான் எப்படி இந்த தொடரில் விளையாடினோம்.
நாம் எவ்வாறு உழைத்தோம். நாம் எந்தெந்த தியாகங்களை செய்தோம் என்பதை நினைத்து ஒட்டுமொத்த நாடுமே தற்போது பெருமை கொள்கிறோம்.
நீங்கள் இந்த சாம்பியன் அணியில் இடம்பெறுவதற்காக உங்களுடைய குடும்பத்தினர், உங்களுடைய மனைவி, உங்களுடைய பயிற்சியாளர் எவ்வளவு தியாகம் செய்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் பெருமைப்படும் ஒரு விஷயத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
இந்த உலகக் கோப்பை வெல்வதற்காக எங்களுடன் சேர்ந்து நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏனென்றால் அவர்தான் நவம்பர் மாதம் என்னை தொடர்பு கொண்டு பயிற்சியாளராக டி20 உலக கோப்பை வரை இருங்கள் என்று என்னை வற்புறுத்தினார்.ரோகித் சர்மாவுடன் பயிற்சியாளராக பணியாற்றுவதை மிகவும் பெருமையாகவும் நினைக்கின்றேன் என கூறியுள்ளார்.
மேலும் அடுத்த தலைமை பயிற்சியாளரின் பெயரை BCCI விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |