நாட்டிற்காக உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும்: எனக்காக வேண்டாம் - பயிற்சியாளர் டிராவிட்
இந்திய அணி டி20 உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பது தனக்காக அல்லாமல், நாட்டிற்காக இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டி
2024 டி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு இப்போட்டியுடன் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனால் சமூக வலைத்தளத்தில் 'Do it for Dravid' (டிராவிட்டிற்காக இதை செய்யுங்கள்) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன்
ஆனால் இதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், ''ஒரு நபராக நான் யார் என்பதற்கு இது முற்றிலும் எதிரானது மற்றும் அது எனது மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. உங்களுக்கு தெரியும் யாருக்காகவாவது இதனை செய்யுங்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று.
நீங்கள் ஏன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அது இருப்பதனால் நான் ஏற விரும்புகிறேன் என்று பதில் கிடைக்கும். நாம் ஏன் இந்த உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும்? ஏனெனில் அது அங்கே இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். அதனால் அதைப் பற்றி பேசவும், விவாதிக்கவும் விரும்பவில்லை. நீங்கள் அந்த பிரச்சாரத்தை (ஹேஷ்டேக்) அகற்ற முடிந்தால் நான் அதை பாராட்டுவேன்' என குறிப்பிட்டார்.
?️ 29 June
— ICC (@ICC) June 29, 2024
? Barbados
It's time for #T20WorldCup 2024 Final ? pic.twitter.com/r2WqbYmlYZ
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |