இந்திய அணியின் பயிற்சியாளராக இதை செய்வேன்! ராகுல் டிராவிட் உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமனம் செய்துள்ளதால், ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்திய அணிக்கு தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக் காலம், நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரோடு முடியவுள்ளது.
இதனால் இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற பேச்சு எழுந்து வந்தது. இதில் பெரும்பாலும், ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரின் பெயர் அடிபட்டது.
இந்நிலையில், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு உண்மையில் பெருமைக்குரியது. நான் இந்தப் பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லவிரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.