இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா!
ராகுல் டிராவிட்டுக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் செல்லவில்லை
பிசிசிஐ-யின் மருத்துவக் குழு கண்காணிப்பில் ராகுல் டிராவிட் இருப்பார் என தகவல்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று துபாய் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
IANS
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடருக்காக புறப்படுவதற்கு முன்பாக நடத்தப்பட்ட வழக்கமான சோதனையில், அவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
BCCI
மேலும், பிசிசிஐ-யின் மருத்துவக் குழு மேற்பார்வையில் டிராவிட் உள்ளார் எனவும், அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் இரண்டு நாட்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு, கோவிட் 19 நெகட்டிவ் என வந்த பின்னர் அணியுடன் அவர் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.