இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேசிய கிரிக்கெட் அகடாமி தலைவருமான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் இளம் வீரர்கள் கொண்ட இந்திய ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்தின் போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளுகும் மோதவுள்ளன.
அதேசமயம், ஜூன் 18ம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-இந்திய அணிகள் மோதுகின்றன.
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி விளையாடவுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான கோஹ்லி தலைமையிலான இந்திய அணியுடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செல்லவுள்ளார்.
இதன் காரணமாக அதே காலப்பகுதியில் நடக்கும் இலங்கையுடனான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Rahul Dravid to coach Indian team on Lanka tour
— ANI Digital (@ani_digital) May 20, 2021
Read @ANI Story | https://t.co/obY4xi5AYU pic.twitter.com/kbNSGyzd7z
இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களை விளையாடியடுவது இது இரண்டாவது முறையாகும்.
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி