பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும்: போராட்டத்தில் ராகுல் காந்தி
நீட் முறைகேடுகளுக்குபொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
காவல்துறை அடக்குமுறை
CJP போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட காவல்துறை அடக்குமுறையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி மற்றும் தேர்வு முறை தொடர்பாகவே இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் தாக்கப்படும் விதம் முற்றிலும் 'இந்தியத்தன்மைக்கு முரணானது. நேற்று நடந்த சம்பவத்திற்கு மோடி ஜி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை. கல்வி மற்றும் தேர்வு முறைகள் சீர்குலைந்து, அவை நடைமுறையில் இல்லாமலே போய்விட்டன என்பது நாடு முழுவதற்கும் தெரியும்.
பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாணவர்களைக் காவல்துறையினர் தாக்கும் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
போராட்டத்தில் ராகுல் காந்தி
அதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.
நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பிரதமர் இல்லம் நோக்கி சென்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த, காங்கிரஸ் கட்சியினர் அங்கேயே அமர்ந்து போராடி வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |