ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து பிரித்தானியாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, லண்டனில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.
@visuals surface
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, பிரித்தானியாவிலுள்ள லண்டனில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள்.
காந்தி சிலை முன்பு போராட்டம்
தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அங்கு சத்தியாகிரக போராட்டம் நடந்துள்ளது.
@news18
இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, லண்டனில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவினர் அங்குள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக பாதகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.