இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடி கார் மீது செருப்பு வீச்சு
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு காரில் ஊர்வலமாக சென்றார். அப்போது காரின் முன்புறம் இருந்த பிரதமர் மோடியை இருபக்கமும் நின்று பாஜகவினர் வரவேற்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கார் மீது திடீரென செருப்பு வீசப்பட்டது. அதாவது கூட்டத்தில் இருந்து செருப்பு ஒன்று பறந்து விழுந்தது. இதையடுத்து பாதுகாவலர் அந்த செருப்பை காரில் இருந்து எடுத்து அப்புறப்படுத்தினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
ராகுல் காந்தி பதிவு
இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது.
அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |