சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு; குஜராத் அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி மீது வழக்கு
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி(rahul gandhi) தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு இருந்தது.
ஜாமின் நீட்டிப்பு
இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
@ani
ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்கவும் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ये ‘मित्रकाल’ के विरुद्ध, लोकतंत्र को बचाने की लड़ाई है।
— Rahul Gandhi (@RahulGandhi) April 3, 2023
इस संघर्ष में, सत्य मेरा अस्त्र है, और सत्य ही मेरा आसरा! pic.twitter.com/SYxC8yfc1M
"மித்ரகலுக்கு எதிரான ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம் இது. இந்த போராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம், உண்மையே எனது ஆதரவு" என இந்தியில் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் தண்டனையை ரத்து செய்யாவிட்டால், அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும், மேலும் அவர் எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.