ராகுல் காந்தி தள்ளிவிட்டார்.., தலையில் காயம் ஏற்பட்ட பாஜக எம்பி குற்றச்சாட்டு
முன்னால் இருந்த எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டதால் அவர் என் மீது விழுந்து விட்டார் என காயமடைந்த பாஜக எம்பி கூறியுள்ளார்.
பாஜக எம்பி குற்றச்சாட்டு
இந்திய மாநிலங்களவையில் நேற்று முன்தினம் அரசியலமைப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்றார்.
இதயயடுத்து, நேற்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கின. அப்போது, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இன்றும் மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், அம்பேத்கர் விவகாரத்தில் பாஜக எம்.பிக்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாஜக எம்பியான பிரதாப் சந்திர சாரங்கிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய சாரங்கி, "நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டார்.
அப்போது அவர் என் மீது விழுந்தார். இதனால், படிக்கட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த நான் கீழே விழுந்தேன்" என்றார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் காயம் ஏற்பட்டது என்று கூறிய பாஜக எம்பியின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Delhi | BJP MP Pratap Chandra Sarangi says, "Rahul Gandhi pushed an MP who fell on me after which I fell down...I was standing near the stairs when Rahul Gandhi came and pushed an MP who then fell on me..." pic.twitter.com/xhn2XOvYt4
— ANI (@ANI) December 19, 2024
இதையடுத்து, காயமடைந்த பாஜக எம்பி ஆம்புலன்சில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |