மோடியும், அமித்ஷாவும் தேவையில்லை என மக்கள் தெளிவாக கூறியுள்ளனர் - ராகுல் காந்தி
மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
குறித்த தேர்தலின் இறுதி முடிவானது இன்று வெளியாகவுள்ளது. அதற்கான நடவடிக்கை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளனர்.
அதன் போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல் ஒலிப்பதை மக்களின் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், அரசியல் அமைப்பு நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது.
அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது. இதை காப்பாற்றுவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
அரசியல் கட்சிகளை உடைக்கும் வேலையை நாடு முழுவதும் பா.ஜ.க. செய்தது. தெளிவான பார்வையுடன் மக்கள் முன் எங்கள் கொள்கைகளை முன்வைத்தோம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
மோடிக்கு எதிரான போரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம்.
அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் வேலையை விவசாயிகள், ஏழை எளிய மக்கள் செய்துள்ளனர். நாடு மோடியை புறக்கணித்து விட்டது. 10 ஆண்டாக ஆட்சி நடத்திய விதம் சரியல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் மோடியும், அமித்ஷாவும் தேவையில்லை என மக்கள் தெளிவாக அவர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WATCH | Delhi | Addressing a press conference, Congress leader Rahul Gandhi says, "We fought this election not just against BJP but also the institutions, the governance structure of the country, the intelligence agencies CBI &EDI, judiciary because all these institutions were… pic.twitter.com/VbhckSJEvW
— ANI (@ANI) June 4, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |