நைட் கிளப்பில் பார்ட்டி செய்த ராகுல் காந்தி! பரபரப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ
நைட் கிளப்பில் ராகுல் காந்தில் பார்ட்டி செய்த வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நண்பரும் தனியார் செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேபாள் தலைநகர் காத்மண்டுக்கு ராகுல் 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார்.
சும்நிமா உதாஸ் என்பவர் நிமா மார்ட்டின் ஷெர்பாவை மே 5ம் திகதி திருமணம் செய்ய உள்ளார். இதில் கலந்து கொள்ள காத்மண்டு சென்றுள்ள ராகுல் அங்குள்ள மேரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
Rahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate... pic.twitter.com/dW9t07YkzC
இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டியில் ராகுல் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் ராகுலை சுற்றியிருப்பவர்கள் பலர் மது அருந்துகின்றனர். இந்த வீடியோவை பாஜக வெளியிட்டுள்ள நிலையில் காங்கிரஸும் பதிலடி கொடுத்துள்ளது.
அதன்படி நேப்பாளில் உள்ள தனது பத்திரிக்கை நண்பர் ஒருவருடைய திருமணவிழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டார் என்றும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உரிமை இருக்கிறது.
அதனை பொதுவெளியில் வெளியிட்டு பாஜகவினர் தரம்தாழ்ந்து நடந்து கொள்கின்றனர் என காங்கிரஸ் பதிலுக்கு விமர்சனம் செய்துள்ளது.
நேப்பாளில் உள்ள தனது பத்திரிக்கை நண்பர் ஒருவருடைய திருமணவிழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டார் என்றும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உரிமை இருக்கிறதுஅதனை பொதுவெளியில் வெளியிட்டு பாஜகவினர் தரம்தாழ்ந்து நடந்து கொள்கின்றனர் என காங்கிரஸ் பதிலுக்கு விமர்சனம் https://t.co/7mUaqn2IGW
— Niranjan kumar (@niranjan2428) May 3, 2022