இந்தியாவுக்கான மோடியின் பார்வை- ஜேர்மனியில் ராகுல் காந்தி பேச்சால் சலசலப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை தோல்வியடையும் என கூறியுள்ளார்.
இந்த கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி தனது உரையில், “பாஜக, இந்திய ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றியுள்ளது. ED, CBI போன்ற புலனாய்வு அமைப்புகள் ஆயுதமாக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன.
ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடக்கிறது, இதற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சித் கூட்டணி தேவை” என பேசியுள்ளார்.

பாஜக எதிர்வினை
இதனைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “காங்கிரஸ், இந்திய ஜனநாயகத்தை வெறுக்கிறது. ராகுல் வெளிநாடுகளில் இந்தியாவிற்கு எதிராக பேசுகிறார். இது ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளுடன் இணைந்து குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி” என குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்ஜாலே, “ராகுல், தலைவரைப் போல அல்ல, குழந்தையைப் போல நடந்து கொள்கிறார். வெளிநாடுகளில் இந்தியாவை விமர்சிப்பது, நாட்டுக்கு எதிரான செயல்” எனக் கூறியுள்ளார்.
Rahul Gandhi says-" We think people will fight with each other, we think India will fail"
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) December 23, 2025
Can a man who loves Bharat want India to fail?
Rahul Gandhi in Germany says he thinks:
- People will fight each other
-India will fail
- Unrest will happen
From Fighting Indian state,… pic.twitter.com/1Fg6n2pgNT
கூடுதல் கருத்துகள்
ராகுல், “இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது. வலுவான பொருளாதாரத்திற்கு உற்பத்தி மற்றும் தரமான வேலைவாய்ப்புகள் அவசியம்” என முனிக்கில் BMW அருங்காட்சியகத்தில் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக, “இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தியில் 495 சதவீத வளர்ச்சி, ஏற்றுமதியில் 760 சதவீத வளர்ச்சி, ஆட்டோமொபைல் உற்பத்தியில் 14 மடங்கு வளர்ச்சி ” என தரவுகளை வெளியிட்டு, இது தவறான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் ராகுல் காந்தியின் பேச்சு, இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. பாஜக, இதை “இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம்” என கண்டனம் தெரிவித்துள்ளது.
பதிலுக்கு காங்கிரஸ், இது “ஜனநாயகத்தை காப்பாற்றும் முயற்சி” என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rahul Gandhi Berlin speech Modi vision fails, Congress leader criticizes BJP democracy India, Rahul Gandhi vs BJP foreign remarks controversy, Modi government institutions ED CBI opposition cases, BJP reaction Pradeep Bhandari Shobha Karandlaje, Rahul Gandhi manufacturing decline BMW Munich visit, BJP counters with electronics 495 percentage growth data, India democracy debate Rahul Gandhi abroad speech, Rahul Gandhi Germany tour political storm India, BJP vs Congress clash over Modi’s India vision