3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி!
கேரள வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி அமோக வெற்றியை பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற ராகுல் காந்தி
தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
மேலும், தற்போதைய நிலவரப்படி பாஜக 60க்கும், காங்கிரஸ் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |