முடி திருத்தம் செய்யும்போது.., சலூன் கடைக்காரரிடம் பிரச்சனையை கேட்டறிந்த ராகுல் காந்தி
சலூனுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்ட ராகுல் காந்தி, சலூன் கடைக்காரரிடம் அவரது பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.
முடி திருத்தம் செய்த ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் சலூன் கடைக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்டார்.
அப்போது, அவரிடம் பேசி தேவைகள் மற்றும் குறைகளை ராகுல் காந்தி கேட்டறிந்தார். பின்னர், இதனை வீடியோவாக வெளியிட்டு மத்திய அரசை சாடி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சலூன் கடைக்காரர் அஜித் பாயின் கண்ணீரானது, இந்தியாவில் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் கதையை சொல்கிறது.
முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள், தச்சர்கள் வரை வருமானச்சரிவு, அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த கடை, வீடு மற்றும் சுயமரியாதை போன்ற கனவுகள் திருடப்பட்டு உள்ளன.
எனவே, வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள் தேவை. திறமைக்கு ஏற்ப தகுதியை பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை" என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பாராட்டி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |