நாடாளுமன்றத்திற்குள் ராகுலை பூட்டி வைத்து அறைய வேண்டும்.., பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து அறைய வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பரத் செட்டி சர்ச்சையாக பேசியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ சர்ச்சை
கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூரு தொகுதி பாஜக எம்.எல்.ஏ பரத் செட்டி, ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து அறைய வேண்டும் என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.
அதோடு, அவர் மகளூருக்குள் வந்தாலும் அதே கதிதான் என்றும் பேசியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்து மதக் கடவுள் சிவனின் படத்தை ராகுல் காந்தி கையில் ஏந்தி பஜகவினர் முன் காட்டியது குறித்து பேசும் போது தான் இதனை பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "கடவுள் சிவன் தனது கண்ணை திறந்தால் நாம் சாம்பலாகிவிடுவோம் என்று அவருக்கு தெரியாது.
இந்துக்கள் குறித்து என்ன சொன்னாலும் அவர்கள் கேட்டு கொண்டிருப்பார்கள் என்று அவர் நினைக்கிறார். அவரின் குரலுக்கு இங்கிருந்து சென்ற உள்ளூர் தலைவர்கள் தங்களின் வாலை ஆட்டுகின்றனர்.
இந்து மதத்தையும், கோவில்களையும் பாதுகாப்பதை பாஜக தனது கடமையாக நினைக்கிறது. ஆனால், இந்து மதமும் இந்துத்துவாவும் வேறு வேறு என்று காங்கிரஸ் கூறுகிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து வெறும் 99 இடங்களில் வென்றதையே பெரிய சாதனையாக கூறுகிறார்" என்றார்.
இந்நிலையில், ராகுல் காந்தி குறித்து பாஜக எம்எல்ஏ பரத் செட்டி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் மீது காங்கிரஸ் சார்பில் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |