தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகல்! புதிய கேப்டன் நியமனம்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடர் முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான 18 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒரு நாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
- கே.எல்.ராகுல் (கேப்டன்)
- ஷிகர் தவான்
- ருதுராஜ் கெய்க்வாட்
- விராட் கோலி
- சூர்ய குமார் யாதவ்
- ஸ்ரேயாஸ் அய்யர்
- வெங்கடேஷ் அய்யர்
- ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
- இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
- சாஹல்
- அஸ்வின்
- வாஷிங்டன் சுந்தர்
- ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்)
- புவனேஷ்வர் குமார்
- தீபக் சாஹர்
- பிரசித் கிருஷ்ணா
- ஷர்துல் தாக்கூர்
- முகமது சிராஜ்
காயம் காரணமாக இந்திய ஒரு நாள் அணி கேப்டன் ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகியதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
TEAM : KL Rahul (Capt), Shikhar Dhawan, Ruturaj Gaekwad, Virat Kohli, Surya Kumar Yadav, Shreyas Iyer, Venkatesh Iyer, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, R Ashwin, W Sundar, J Bumrah (VC), Bhuvneshwar Kumar,Deepak Chahar, Prasidh Krishna, Shardul Thakur, Mohd. Siraj
— BCCI (@BCCI) December 31, 2021
ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், கடைசியாக 2017ல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய அஸ்வின், கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளார்.
இளம் வீரர் வெங்கடேஷ் அய்யர், முதல் முறையாக இந்திய ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
முகமது ஷமிக்கு பணிச்சுமை காரணமக ஓய்வளிக்கப்பட்டுள்ளது, மேலும், காயம் காரணமாக ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அணித்தேர்வில் பங்கேற்கவில்லை.