ரூ.3.3 லட்சம் சம்பளம்., ரூ.100 கோடி மதிப்பில் பங்களா: எதிர்க்கட்சி தலைவர் பதவியால் ராகுலுக்கு கிடைக்கும் வசதிகள்
இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு கிடைக்கும் பல்வேறு வசதிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
என்னென்ன வசதிகள்?
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றுள்ளது. அந்தவகையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர் ஆகியுள்ளார்.
இதனால், எதிர்க்கட்சி தலைவருக்கு டெல்லியில் 8,250 சதுர அடி பரப்பளவில் டைப்-8 குடியிருப்பு கிடைக்கும். தனி வளாகத்தின் நடுவே வெள்ளை மாளிகை போல் அமைந்துள்ள இந்த குடியிருப்பில் மொத்தம் 7 அறைகள் உள்ளன.
மேலும், வளாகத்தில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு 4 சிறிய குடியிருப்புகள் இருக்கும். அதோடு, அரசு செலவில் சோபா, மேசை, நாற்காலிகள் என பல்வேறு பொருட்கள் அளிக்கப்படும்.
டெல்லியில் இந்த பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என்று சொல்லப்படுகிறது. மாத வாடகை பல லட்சம் ஆகும்.
இந்த மாதிரியான வசதிகள் கொண்ட இந்திரா காந்தியின் பிரதமர் இல்லத்தில் சிறு வயதில் இருந்தே ராகுல் காந்தி வாழ்ந்துள்ளார். அடுத்து, அவரது தந்தை ராஜீவ் காந்தி பிரதமரான போதும் இது போலவே இருந்துள்ளார்.
குறிப்பாக, ரேபரேலி எம்.பி.யாக தேர்வான ராகுல் காந்தி வசிக்கும் துக்ளக் சாலை வீடும் டைப்-8 வகையைச் சார்ந்தது. எனினும் ராகுல் காந்தி இங்கேயே தொடர்வாரா அல்லது புதிய இடத்துக்கு மாறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.
ராகுல் காந்தியின் இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியானது மத்திய இணையமைச்சர் பதவிக்கு ஈடானது. எம்பியாக இவர் ரூ.2 லட்சம் மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் இனி ரூ.3.3 லட்சம் ஊதியத்தை பெறுவார்.
அதோடு, 14 உதவியாளர்கள் அரசு சார்பில் கிடைப்பார்கள். இவருக்கு கிடைத்து வந்த எம்.பி.க்கான சலுகைகள் இனி கிடைக்காது. ஆனால், எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |