சுப்மன் கில் பலமாக அடித்த பந்தை அந்தரத்தில் பறந்தபடி ஒரு கையால் பிடித்த ராகுல்! வைரல் வீடியோ
ஐபிஎல் போட்டியில் சுப்மன் கில் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்தபடி ஒரு கையால் ராகுல் திருப்பதி கேட்ச் பிடித்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் - ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணி ஓப்பனின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் 7 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.
Rahul tripathi stunning catch... #GTvsSRH #SRHvGT pic.twitter.com/UA0focDkgi
— Chinthakindhi Ramudu (O- Negitive) (@RAMURAVANA) April 11, 2022
அப்போது அவருக்கு புவனேஷ்வர் வீசிய பந்தை ஆப் சைட் திசை நோக்கி வேகமாக அடித்தார். அதை அந்தரத்தில் பறந்தபடி ஒத்தை கையால் பிடித்து ஹைதராபாத் வீரர் ராகுல் திருப்பதி அசத்தினார்.
இதையடுத்து ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.