ஜேர்மனியில் ஒரே நேரத்தில் 24 இடங்களில் ரெய்டு... ஒரு ரஷ்ய செல்வந்தருக்கு வைக்கப்பட்ட குறி
ஜேர்மனியில், ஒரே நேரத்தில் 24 இடங்களில் ஜேர்மன் பொலிசார் ரெய்டுகளில் ஈடுபட்டார்கள்.
தடைகளை மீறுதல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு ரஷ்ய செல்வந்தரைக் குறிவைத்து இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஜேர்மனியில், குறிப்பாக பவேரியா மாகாணத்தில் ஒரே நேரத்தில் 24 இடங்களில் 250 ஜேர்மன் பொலிசார் ரெய்டுகளில் ஈடுபட்டார்கள்.
ஒரு ரஷ்ய செல்வந்தரைக் குறிவைத்து இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
அவர் யார் என பொலிசார் கூறாவிட்டாலும், பவேரிய மற்றும் உள்ளூர் ஊடகங்கள், சம்பந்தப்பட்ட நபர் Alisher Usmanov என்னும் ரஷ்யர் என தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டவர்களில் Alisherம் ஒருவர் ஆவார்.
அவர் தடைகளை மீறுதல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
69 வயதாகும் Alisher, உஸ்பெகிஸ்தானில் பிறந்த ரஷ்யக் குடிமகன் ஆவார். ரஷ்யாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர் என கருதப்படும் Alisherஇன் சொத்து மதிப்பு சுமார் 19.5 பில்லியன் டொலர்கள் ஆகும்.
அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நெருக்கமான தொடர்புடையவர் என கருதப்படுகிறது.