ஒரே நாளில் பிரபல தமிழ்த் தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை! பரபரப்பில் திரையுலகம்
தமிழகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகளில், ஒரே நாளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்கள் மீது வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்.
குறிப்பாக கலைப்புலி தாணு, அன்புச் செழியன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் மதுரையில் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் ஒரே நாளில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்படுவது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.