ரயில்களில் விற்கப்படும் குடிநீர் போத்தல்களின் விலை குறைப்பு
இந்திய ரயில்வே பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
GST சீரமைப்புகளின் பயன்களை பயணிகளுக்கு வழங்கும் நோக்கில், ரயில்களில் மற்றும் ரயில்வே நிலையங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களின் விலை குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில் நீர் (Rail Neer) என்ற IRCTC-யின் பிரபலமான 1 லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச விலை ரூ.15-ல் இருந்து ரூ.14-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 500 மில்லி போத்தலின் விலை ரூ.10-லிருந்து ரூ.9-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை செப்டம்பர் 22 முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விலை குறைப்பு IRCTC மற்றும் ரயில்வே அங்கீகரிக்கப்பட்ட பிற பிராண்டுகளின் குடிநீர் போத்தல்களுக்கும் பொருந்தும்.
GST कम किये जाने का सीधा लाभ उपभोक्ताओं को पहुंचाने के उद्देश्य से रेल नीर का अधिकतम बिक्री मूल्य 1 लीटर के लिए ₹15 से कम करके 14 रुपए और आधा लीटर के लिए ₹10 से कम करके ₹9 करने का निर्णय लिया गया है। @IRCTCofficial #NextGenGST pic.twitter.com/GcMV8NQRrm
— Ministry of Railways (@RailMinIndia) September 20, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IRCTC, Indian Railways, Rail Neer Bottled Water price cut, Rail Neer price cut