இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு - அதிர்ச்சியில் பயணிகள்
இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பயணத்திற்காக பெரும்பாலானோர் ரயில்களை தேர்ந்தெடுப்பதற்கு, அதன் குறைவான கட்டணமும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
ரயில் கட்டண உயர்வு
இந்நிலையில், வரும் டிசம்பர் 26 ஆம் திகதி முதல் ரயில் கட்டணம் உயர உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின் படி, 215 கி.மீ. மேல் பயணிப்பவர்களுக்கு சாதாரண வகுப்பில் 1 கி.மீ.க்கு 1 பைசாவும், மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் AC மற்றும் AC அல்லாத வகுப்பில் 1 கி.மீ.க்கு 2 பைசாவும் உயர்த்தப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 500 கி.மீ வரை பயணிப்பவர்கள் கூடுதலாக ரூ.10 செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த புதிய கட்டண மாற்றத்தின் மூலம், ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.600 கோடி கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |