முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் பயணமா? டிக்கெட் பெறுவதில் புதிய கட்டுப்பாடு
முன்பதிவு செய்யாத ரயில் பயணத்தில், முக்கிய கட்டுப்பாடு ஒன்றை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பதிவு செய்யாத ரயில் பயணம்
குறைந்த கட்டணம் மற்றும் சவுகரிமான பயணம் காரணமாக நாள்தோறும், லட்சக்கணக்கான மக்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ரயில் டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும். இதனால், பயணிகள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் 100 பேர் அமர்வதற்கான இருக்கை உள்ள நிலையில், 300க்கும் அதிகமானோர் ஏறி, மூச்சு விடுவதற்கே சிரமான நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
சமீபத்திய கும்பமேளாவில் நிகழ்விற்கு செல்ல, டெல்லி ரயில் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
பெட்டிக்கு 150 டிக்கெட்
ஒரே நேரத்தில், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க அதிகளவில் டிக்கெட் வாங்கியதே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்த சிக்கலை சரி செய்யும் வகையில், ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, இனி தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க, ஓரு பெட்டிக்கு 150 டிக்கெட்கள் மட்டும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, டெல்லியில் இந்த கட்டுப்பாடுகள் சோதனை முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதில், உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னர், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |