பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் ரயில் நிலையங்கள் எவை தெரியுமா?
இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்கும் ரயில் நிலையங்களின் பட்டியளை பற்றி பார்க்கலாம்.
எந்தெந்த ரயில் நிலையங்கள்?
இந்திய நாடானது பரந்த அளவிலான ரயில்வேயை கொண்டுள்ளது. அதுவும் முக்கியமாக இந்திய நாட்டை அதன் அண்டை நாடுகளுடன் இணைக்கும் சிறப்பு சர்வதேச ரயில் பாதைகளையும் கொண்டுள்ளது.
ஹால்டிபாரி ரயில் நிலையம்
இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள ஹால்டிபாரி ரயில் நிலையமானது வங்காளதேச எல்லையிலிருந்து வெறும் 4.5 கி.மீ தொலைவில் உள்ளது. இது, ஹால்டிபாரி, சில்ஹாட்டி ஆகிய நிலையங்களால் வழியாக இணைக்கிறது.
இந்த ரயில் இணைப்பானது மீண்டும் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. நியூ ஜல்பைகுரி சந்திப்பிலிருந்து டாக்கா வரை பயணிக்கும் மிதாலி எக்ஸ்பிரஸ் இந்த இடத்தை அடைகிறது.
பெட்ராபோல் ரயில் நிலையம்
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பெட்ராபோல் ரயில் நிலையமானது கொல்கத்தாவை வங்காளதேசத்தின் குல்னாவுடன் இணைக்கும் இணைக்கிறது.
இந்த நிலையமானது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பயணிக்க செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை வைத்திருக்க வேண்டும்.
ஜெய்நகர் ரயில் நிலையம்
பீகாரின் மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெய்நகர் ரயில் நிலையமானது நேபாளத்தில் உள்ள குர்தா நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையமானது இந்தியா-நேபாள எல்லையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
சிங்காபாத் ரயில் நிலையம்
மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள சிங்காபாத் ரயில் நிலையமானது வங்காளதேசத்தின் ரோஹன்பூர் ரயில் நிலையம் மற்றும் நேபாளத்துடனான இணைப்பை ஏற்படுத்துகிறது.
ராதிகாபூர் ரயில் நிலையம்
மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராதிகாபூர் ரயில் நிலையமானது, வங்காளதேசத்தின் உள்ள பீரால் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜோக்பானி ரயில் நிலையம்
பீகாரின் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோக்பானி ரயில் நிலையமானது நேபாளத்தின் பிரத்நகர் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அட்டாரி ரயில் நிலையம்
அமிர்தசரஸுக்கு அருகில் உள்ள அட்டாரி ரயில் நிலையமானது பாகிஸ்தானின் லாகூரை இணைக்கிறது. இந்த ரயில் போக்குவரத்து அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |