டெல்லி விமான நிலையத்தை சூழ்ந்த மழைநீர்: இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
இந்திய தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் நீர் தேக்கம்
டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியான காட்சிகளில், விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் பலர் தங்களது கால் சட்டையை மடித்துக் கொண்டும், தங்களது பைகளை தண்ணீரிலேயே தள்ளிக் கொண்டும் சென்றது பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை
#Newsroom with @GargiRawat | Heavy rain batters Delhi-NCR, waterlogging reported at Delhi airport; red alert issued, @rsoninews brings in more details pic.twitter.com/zfOstnWctC
— NDTV (@ndtv) September 4, 2026
பல்வேறு கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள் படி, பாலம் பகுதியில் 3.4 மி.மீ மழையும், நஜஃப்கரில்(Najafgarh) 0.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த கனமழையை கருத்தில் கொண்டு டெல்லியின் முக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும் என்றும், இதனால் தலைநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |