மழையால் ரத்தான காலிறுதி போட்டிகள்; இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை
rain abandons quarterfinal in asian games srilanka to face india in semi: மழையால் இன்று நடைபெறவிருந்த காலிறுதி போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் அரையிறுதியில், இந்தியாவை இலங்கை எதிர்கொள்ள உள்ளது.
மழையால் ரத்தான காலிறுதி போட்டிகள்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவர் கிரிக்கெட்டின் காலிறுதி போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று நடைபெறவிருந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான காலிறுதி போட்டி, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான காலிறுதி போட்டிகள் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதனால், ஐசிசி T20 தரவரிசை அடிப்படையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
இதே போல், இன்று நடைபெற இருந்த 2 காலிறுதி போட்டிகளும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரையிறுதியில் மோத உள்ள இந்தியா - இலங்கை
இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையேயான காலிறுதி போட்டி, வங்கதேசம் மற்றும் மலேசியாவிற்கு இடையேயான காலிறுதி போட்டிமழையால் ரத்து செய்யப்பட்டதால், ஐசிசி T20 தரவரிசை அடிப்படையில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அக்டோபர் 1 ஆம் திகதி நடைபெற உள்ள அரையிறுதி போட்டிகளில், இலங்கை இந்தியாவையும், பாகிஸ்தான் வங்கதேசத்தையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்த போட்டிகளும் மழையால் ரத்தானால் ஐசிசி T20 தரவரிசை அடிப்படையில் இந்தியா அக்டோபர் 3 ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு செல்லும்.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டி, மழையால் ரத்தானதால், ஐசிசி தரவரிசை அடிப்படையில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது..