தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் ,நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக வேலூரில் 105°F வெப்பம் வாட்டியது.
இந்நிலையில், உள்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கும்.

சென்னையில் 100°F அளவுக்கு வெயில் இருக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழையின்போது இடி, மின்னலுடன், 40km வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |