நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை.., 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடக்கு தெலங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேநேரம் ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரும் மே 1 மற்றும் 2 ஆகிய திகதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |